“சூரிய சக்தி மூலம் வீடுகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அரசுக்கு விற்க முடியும்..!!யுனிட் 22/= ரூபாக்கு வாங்கப்போகும் அரசாங்கம்
நாட்டில் தற்போது காணப்படும் மின்சார பிரச்சினைகள் தொடர்பில் விஷேட திட்டங்களை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.அதற்கான முதல் படியாக இலங்கையில் மின்சாரத்தினையும் விற்பனை செய்யக்கூடிய திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளோம் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இதனைக் கூறினார். மேலும், சூரிய ஒளியினை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
அந்தவகையில் யாழ்ப்பாணம், பொலன்னறுவை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கவுள்ளோம். இதற்கான ஆதரவு வெளிநாடுகளின் முலம் பெற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டு மக்கள் தமது வீடுகளில் சூரிய சக்தியின் மூலம் மின்சாரத்தினை உற்பத்தி செய்து கொள்ள முடியும். இவ்வாறு உற்பத்தி செய்து கொள்ளும் மின்சாரத்தினை அவர்களால் அரசிற்கு விற்பனை செய்யவும் முடியும்.
இவ்வாறு அரசு பெற்று பெற்றுக்கொள்ளும் மின்சாரத்திற்கு ஒரு அலகிற்கு 22ரூபா வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார தேவை குறைவடைவதோடு பொது மக்கள் வருவாயினையும் தேடிக்கொள்ள முடியும்.
மேலும், இதற்காக கடன் வசதிகளையும் பொது மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசு ஆயத்தமாகவுள்ளது. இதன் காரணமாக நாட்டின் மின்சார சிக்கலுக்கு தீர்வு கிடைப்பதோடு மக்களும் செல்வந்தர்களாக மாற முடியும்.
இதன் ஆரம்ப கட்ட நிகழ்வாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதனை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு ஒன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW