திருகோணமலையில் ஹேரோயின் வைத்திருந்தவர் விளக்கமறியல்.

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து மில்லிகிராம் ஹேரொயினை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று வியாழக்கிழமை (4) உத்தரவிட்டார்.
திருகோணமலை, சி.வி.பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பத்து மில்லிகிராம் ஹேரொயினை வைத்திருந்த வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (3) கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் அப்பிரதேசத்தில் கஞ்சா மற்றும் ஹேரோயின் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் வியாழக்கிழமை (4) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியல் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW