துப்பாக்கி, நாக்கு, பேனா, கணணி கீபோர்ட், கைப்பேசி : ஆபத்தான ஆயுதங்களை அவதானமாக கையாளுவோம்!
1. ஒரு மனிதனை கொலை செய்தால் கொலையாளி கொல்லப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய குற்றவியல் சட்டமாகும்.
ஆனால் கொல்லப்பட்டவரின் குடும்பம் மன்னிக்கிற போது கொலையாளி விடுதலை பெறுகிறார்!
மன்னித்தவர்கள் பெருந்தன்மை கொண்டவர்கள்!
ஆனாலும் இங்கே கொல்லப்பட்டவர் திரும்பிவரப்போவதில்லை!
2. ஒரு மனிதனின் பண்புகள் படுகொலைசெய்யப்படும் போது
( Character Assassination) அது புறமாக இருந்தால் அந்த நபரின் மாமிசத்தை உண்பது போன்ற பாவமாகவும், அவதூறாக இருந்தால் கசையடிகளுக்கு உரித்தான பாவமாகவும் அமையும்.
இங்கே பாதிக்கப்பட்ட நபர், பண்புகளை படுகொலைசெய்தவரை மன்னித்து அவரோடு ஐக்கியமாகிவிடவும் முடியும்.
அது அவரது பெருந்தன்மை!
ஆனால் பகிரங்கமாக பொதுவெளியில் படுகொலை செய்யப்பட்ட அவரது பண்புகளை மீட்டுத்தருவது யார்?
இழக்கப்பட்ட மானமும், உயிரும் ஒரு போதும் திரும்பிவராது.
துப்பாக்கி, கத்தி, நாக்கு, பேனா, கணணி கீபோர்ட், கைப்பேசி ஆகியவை ஆபத்தான ஆயுதங்கள் அவதானமாக கையாளுவோம்! இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
