முகப்பருவிலிருந்து தப்பிக்க முள்ளிநியூஸ்

முகப்பருவிலிருந்து தப்பிக்க


 முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என இளம் பெண்கள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் தற்போது இளம் பருவத்தினருக்கு முகப்பரு என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. முகப்பரு பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதை பார்ப்போம். சோப்புக்கு பதிலாக ஆரஞ்சு தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். ப்ரெஷ் ஆரஞ்ச் பேஸ்ட் போடலாம்.

எலுமிச்சை தோலை உலர்த்தி பொடியாக்கி போடலாம். பருக்கள் மீது ஆலீவ் ஆயில் போடலாம். ஆப்பிள் சி டார் கால் ஸ்பூன், தண்ணீர் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து காட்டன் வைத்து தொட்டு பருக்கள் மீது போடவும். இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவவும். புதினா இலைசாறு எடுத்து பருக்கள் மீது தடவி இரவு முழுவதும் வைத்து காலையில் முகம் கழுவ வேண்டும். இதை இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW