கிண்ணியாவில்:- பாடசாலை மாடிக் கூரை மீது ஏறி புறா பிடிக்க சென்ற இளைஞன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார் முள்ளிநியூஸ்

கிண்ணியாவில்:- பாடசாலை மாடிக் கூரை மீது ஏறி புறா பிடிக்க சென்ற இளைஞன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார்


அனுப்புனார்:-ஈஹ்சான பரீட்

 இச் சம்பவம் நேற்று முன் தினம் 29 திங்கட்கிழமை இரவு கிண்ணியா குட்டிக்கராச் இஹ்ஸானிய்யா வித்தியாலயத்தில் இடம் பெற்றதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிழந்தவர் கிண்ணியா இடிமண் பகுதியைச் சேர்ந்த முகம்மட் இர்ஷாத் வயது- 26 இளைஞராவர்.

இவர் தமது நண்பர்கள் இருவருடன் பாடசாலை மேல் மாடியில் புறா பிடிப்பதற்காக மரம் ஒன்றினால் ஏறி புறா பிடிப்பதற்காக முயற்சித்த போது கிழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

இச்சம்பவத்தில் அவருடன் துணைக்கு சென்ற நண்பர்கள் கிழே விழுந்த சத்தம் கேட்டு

இரு நண்பர்களும் அவரை அழைத்த போது எவ்வித பதிலும் இல்லாததால் சென்று பார்த்த போது மாடி தட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

இது சம்பந்தமாக மற்றைய இரு நண்பர்களையும் கிண்ணியா பொலிஸார் கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

உயிழந்தவர் விழுந்து உயிழந்தார அல்லது மின்சாரம் தாக்கி உயிழந்தார என்பதைப் பற்றி பொலிஸார் விசாரணை மேற் கொண்டனர்.

இச் சம்பவத்தில் உயிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்திய சாலையில் பிரேர பரிசோதணைக்க வைக்கப் பட்டுள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW