முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் களைய வேண்டும் முள்ளிநியூஸ்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் களைய வேண்டும்




கலாநிதி மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளிற்குப் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன, மக்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து தீயசக்திகளின் எதிர்பார்ப்புகளை முறியடிக்க வேண்டும்.

தீய சக்திகளின் அரங்கேற்றங்கள் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை, அவர்கள் ஊதியத்திற்கு உழைக்கின்றார்கள்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் கூட்டுப் பொறுப்புடன் சிவில் அரசியல் சன்மார்க்கத் தலைமைகள் ஒன்றுகூடி ஷூரா அமைப்பில் தீர்மானங்களை எடுத்து உரியதரப்புக்களுடன் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

அதேவேளை மக்களிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசும் மக்கள் பிரதிநிதிகளும் செய்து கொடுப்பது அவர்களது கடமையாகும்.

கவனத்திற்கு கொண்டு வரவும், கவனயீர்ப்புகள் நடத்தவும் என மக்களிடம் எதிர்பார்ப்பது கையாளாகாத வங்குரோத்து அரசியலாகும். முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனம் களைய வேண்டும்.
                                                 
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW