இந்தியாவுடன் பாலம் அமைக்கும் தேசத்துரோகச் செயலை செய்யமாட்டேன்! முள்ளிநியூஸ்

இந்தியாவுடன் பாலம் அமைக்கும் தேசத்துரோகச் செயலை செய்யமாட்டேன்!


இந்தியாவையும் சிறீலங்காவையும் இணைப்பதற்காக மன்னாரிலிருந்து பாலம் அமைப்பது தொடர்பாக இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இத்தகைய தேசத்துரோகமான செயலை தனது அரசாங்கம் ஒருபோதும் செய்யாதெனவும், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கனேலந்தை ரஜமகா விகாரையின் அதிபதி சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ தம்ம தஸ்ஸி தேரரின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு விகாரையில் புத்தர் சிலையை சூழ புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க வேலியை திறந்துவைத்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், தென்னிந்தியத் தேர்தலின்போது ஒரு தென்னிந்திய அரசியல்வாதியால் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறப்பட்ட இந்த வார்த்தையில் எந்தவொரு உண்மையுமில்லையெனவும், அத்தகயை கூற்றுக்களினால் சிலர் எமது நாட்டை பிழையான வழியில் வழிநடாத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தியின் போதும் சர்வதேச ரீதியாகவும் எமக்கு உலகிற்கு வழங்கக்கூடிய உன்னத பங்களிப்பு பௌத்தத் தத்துவமாகும் எனக் குறிப்பிட்ட அவர் சர்வதேச ரீதியாக தேரவாத பௌத்த சமயத்தை பிரசாரம் செய்யும் மத்திய நிலையமாக ஸ்ரீலங்காவைப் மாற்றி உயர் தொழிநுட்ப உலகுடனும் வர்த்தக சமூகத்துடனும் பின்னடைந்துசெல்லும் சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.


இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW