81 பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் முள்ளிநியூஸ்

81 பௌத்த பிக்குகள் விளக்கமறியலில்


கடந்த 15 மாதங்களில் 81 பௌத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நீதிமன்றறை அவமரியாதை செய்த குற்றச்சாட்டுக்கு இலக்கான 8 பௌத்த பிக்குகளும் யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவரும் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டனர்.

துஸ்பிரயோகங்கள், புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த எழுப்பிய வாய்மொழி மூல கேள்விக்கு பதிலளித்த போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.(tw)

இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW