மாவனல்லை முஸ்லிம் ஒருவருடைய பிரமாண்ட வர்த்தக நிலையம் பெரும்பான்யினரின் கையில்
நன்றி - அனுப்புனர்
நஸீஹா ஹஸன்
மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான அல்முபாறிஸ் வர்த்தக நிலையம் பெரும்பான்மை கைகளுக்குச் சொந்தமாகியுள்ளது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள பல கோடி ரூபா பெறுமதியான இந்த பிரமாண்ட கட்டிடம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளுக்கு சென்றுள்ளமை முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.
இதனால் எதிர்காலத்தில் இந்தக் கட்டிடத்தை பயன்படுத்தி மாவனல்லையில் உள்ள ஏனைய முஸ்லிம்களின் வியாபாரத்தை சிதைக்கக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.
6 மாடிகளைக் கொண்டதாக 2013 ஆம் ஆண்டு இந்த வர்த்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மானப் பணிகளுக்காக பணம் பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தை குறித்த திகதியில் வழங்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வர்த்தக நிலையம் பறிமுதல் செய்யப்பட்டு பகிரங்க ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன் போது ஆரம்ப விலையாக 600 மில்லியன் ரூபா ஏலம்விடப்பட்ட போதிலும் அதனை யாரும் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதனால் இறுதியாக இது குறித்த வங்கிக்கே சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த கட்டிடத்தை முஸ்லிம்கள் பக்கம் திருப்பிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இன்னும் உள்ளது. இதனை எமது சமூகத்தில் உள்ள தனவந்தர்கள் சமூக நோக்கோடு முன்வந்து அந்தக் கட்டிடத்தை பெற்றுக் கொள்வார்களாயின் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW