அனுமதியின்றி அமைச்சர்கள் வெளிநாடு செல்ல தடை!
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முழுமையான அனுமதியை பெற வேண்டும் என ஜனாதிபதி, கடிதம் ஒன்றின் மூலம் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்து எழுத்து மூலமான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரச நிதி மற்றும் வெளிநாட்டு திட்டங்கள் மூலம் கிடைக்கும் நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் குழுக்களாக வெளிநாடுகளுக்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளதால் ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
