பள்ளிவாசல் மீது தாக்குதல்!
பொரளஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை பள்ளிவாசலின் பணிபுரியும் ஒருவருக்கும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW