முஸ்லிம்களை அழித்து விடுவதாக அச்சுறுத்தியவரை கைது செய்ய பிரதமர் உத்தரவு!

“ முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம்” என்று கத்தி எச்சரிக்கை விடுத்த ‘சிங்ஹலே’ அமைப்பின் ஆதரவாளரை உடனடியாக கைது செய்யுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ‘எம் எல்லோருக்கும் ஒரே இரத்தம்’என்ற தொனிப்பொருளிலான அமைதிப் பேரணியில் நுழைந்து குழப்பம் விளைவித்த ‘சிங்ஹலே’ அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் “இலங்கையிலுள்ள முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழித்துவிடுவோம். இது சிங்கள நாடு” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் அஸ்லம் ஹாஜியார் ஆகியோரினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW