வல்லப்பட்டையை பொலிஸாருக்கே விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி கைது முள்ளிநியூஸ்

வல்லப்பட்டையை பொலிஸாருக்கே விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ் அதிகாரி கைது


இலங்கையில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள வல்லப்பட்டையை பொலிஸாருக்கே விற்பனை செய்ய முயற்சித்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிந்தநுவர காட்டுப் பகுதியில் வெட்டப்பட்ட வல்லப்பட்டை ஒன்றரை கிலோ கிராமை விற்பனை செய்ய முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாறு வேடத்தில் சென்ற பொலிஸாருக்கு குறித்த அதிகாரி வல்லப்பட்டையை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

மத்துகம பிரதேசத்தில் வைத்து வல்லப்பட்டை விற்பனை செய்ய முயற்சித்த போது களுத்துறை மோசடி தவிர்ப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த அதிகாரியையும் அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியின் சகோதரர் இராணுவ படைச் சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

வல்லப்பட்டையை அலுத்கம பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 17 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் முகவர்கள் ஊடாக பேசி இந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வல்லபட்டையை வாங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாறுவேடமிட்டு சென்றுள்ளனர்.

கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்ட போது வல்லபட்டையுடன் பொலிஸ் அதிகாரி, இராணுவப் படைச் சிப்பாய் உள்ளிட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டதுடன் வல்லப்பட்டையும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று மத்துகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.                                                 

 இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW