திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது முள்ளிநியூஸ்

திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது




திருகோணமலை குச்சவெளி கல்லாம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குச்சவெளி காஸிம் நகர் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குச்சவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.                                               
   இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW