உலகைக் கலக்கும் : “ஹாமீத் அப்தி உலக இளைஞர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்குகிறார்

கட்டாரில் வசிக்கும் புத்தளத்தைச் சேர்ந்த பைரூஸ், சன்ஸீரா தம்பதிகளின் புதல்வன் ஹாமித் அப்தி (Hamid Abdi) இன்று முதல் மூன்று நாட்களுக்கு (Sat 27 – Monday 29) பிரான்ஸ் Lille இல் World English Scrabble Players Association – WESPA அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான உலக இளைஞர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் (World Youth Scrabble® Championship-2016) போட்டியில் பங்குபற்றுகின்றார்.
டோஹாவிலுள்ள Stafford கல்லூரியில் 6 ஆம் தரத்தில் கல்விபயிலும் 10 வயதுடைய அப்தி 2 ஆம் தரத்திலிருந்தே ஸ்கிராபிள் விளையாடுவதற்கு ஆரம்பித்தார். டோஹாவில் இடம்பெற்ற சர்வதேச பாடசாலைகயளுக்கான ஸ்கிராபிள் போட்டி – 2016 இலும் சாம்பியனாகத் தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸில் இன்று முதல் ஆரம்பமாகும் சர்வதேச போட்டியொன்றில் கலந்து கொள்வதன் மூலம் எமது மண்ணுக்கு பெருமையயைத்தேடித்தந்துள்ள அப்தி இப்போட்டியிலும் தனது திறமையைக்காட்டி முதற்தர வெற்றியாளராக சாதனைப்படைக்க வேண்டுமென புத்தளம் மக்கள் சார்பாக Puttalam Online தனது வாழ்த்துக்களைத் தெரித்துக் கொள்கின்றது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW