சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி முள்ளிநியூஸ்

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி





வாழைத்தண்டு மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும். இப்போது வாழைத்தண்டு பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி
தேவையான பொருட்கள் :

தயிர் – ஒரு கப்
வாழைத்தண்டு – 300 கிராம்
கொத்தமல்லித் தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, வாழைத்தண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்

* தயிரை நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கடைந்த தயிரை ஊற்றி அதில் நறுக்கிய கொத்தமல்லி, வாழைத்தண்டு, உப்பை போட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.

* சத்தான வாழைத்தண்டுப் பச்சடி ரெடி.

பலன்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனையைச் சரிசெய்யும்.                                                 

 இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW