PCOS எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபஞ்சரில் தீர்வு!! முள்ளிநியூஸ்

PCOS எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபஞ்சரில் தீர்வு!!


பத்து பெண்களில் ஒரு பெண் இந்த Poly Cystic Ovary பிரச்சினையால் பாதிப்பு இருக்கிறது.
கர்பப்பையில் இருபுறமும் சினைப்பைகள் இருக்கும், இந்த சினைப்பையில் (Ovary) நிறைய கருமுட்டைகள் இருக்கும், இந்த கருமுட்டைகள் முதிர்ச்சி அடைந்து ஆணின் விந்தணு சேரும்போது கர்ப்பம் உருவாகிறது,

இந்த கருமுட்டையுடன் விந்தணு சேராதபொழுது மாதவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. இந்த சினைப்பை கருமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் போகும்பொழுது சின்ன நீர்கட்டிகளாகி பெரிய நீர்கட்டிகளாக வளரும். அது ௪ (நான்கு) செண்டிமீட்டருக்கும் மேல் இருந்தால் பல பிரச்சினைகள் வரும். இந்த நிலையை தான் PCOD அல்லது PCOS என்கிறோம்.

இதனால் முக்கியமாக பாதிக்கபடுவது பெண்களின் மாதாந்திர Cycle, முறையற்ற மாதவிலக்கு, மாதவிலக்கே வராமல் போவது, உடல் பருமன் அடைவது, உடலில் முடிவளர்ச்சி இருப்பது, மற்றும் முகப்பரு போன்ற தோல் தொடர்பான வியாதிகள் PCOS/PCOD எனும் கருப்பை நீர்க்கட்டிக்கு அக்குபங்க்சர் சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும்!

கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது கருப்பை நீர்க்கட்டியை போக்கும் எளிய வழிமுறை!

IVF எனப்படும் செயற்கை முறை கருத்தரிப்பிற்கு அக்குபங்க்சர் மருத்துவம் சிறந்த உந்து சக்தியாக அமைகிறது. இந்த முறை செயற்கை கருத்தரிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு அக்குபங்க்சர் சிகிச்சை, கருத்தரிப்பை வெற்றிகரமாக மாற்றுகிறது.

அக்கு புள்ளிகள்: ST29, ST25, CV3, CV4, UB23, SP6, SP9, SP10                                                  இதனை நண்பர்களுடன் பகிரவும்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW