அல்லாஹ் என்று சொல்லியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதிகள்..! முள்ளிநியூஸ்

அல்லாஹ் என்று சொல்லியதால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதிகள்..!



 flyt



அல்லாஹ் என்று சொல்லியதால் விமானத்திலிருந்த முஸ்லிம் தம்பதிகளை (நஸீயா – பைசல் அலி) இறக்கிவிடப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

பரிசிலிருந்து அமெரிக்கா ஒஹியோ பிரதேசத்திற்கு டெல்டா விமானத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் தம்பதிகள் சென்று கொண்டிருக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹிஜாப் அணிந்து கணவனுடன் சென்ற முஸ்லிம் பெண் தலையில் ஹெட்போனை போட்டுக்கொண்டிருந்ததுடன் தொலைபேசியில் அல்லாஹ் என்றும் சொல்லியுள்ளார்.

இதனை அவதானித்த விமானப்பணிப்பெண்கள் விமான ஓட்டியிடம் முறையிட்டுள்ளனர்.

குறித்த விமான ஓட்டி முஸ்லிம் தம்பதிகளை விமானத்திலிருந்து நீக்காவிட்டால் தான் விமானத்தை செலுத்தப் போவதில்லை என பிரான்ஸ் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களை விமானத்தை விட்டு உடனே இறக்கிய பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் பொலிசாரின் விசாரணை தோல்வியிலேயே முடிந்துள்ளது.

விமானத்திலிருந்து புறப்படும் போது முஸ்லிம் பெண் தனது பெற்றோரிடம் பேசுகையில் அல்லாஹ் என்ற வசனத்தை பயன்படுத்தியதால் முஸ்லிம் தம்பதிகள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.
<                                                 இதனை நண்பர்களுடன் பகிரவும்.
br /> செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW