கிண்ணியாவில் சிப்பி தொழிலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முள்ளிநியூஸ்

கிண்ணியாவில் சிப்பி தொழிலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்



அனுப்புனர்:- Ihzana fareed

திருகோணமலை, கிண்ணியா பிரதேச சிப்பி தொழிலாளர்கள், இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

கிண்ணியா நகரசபை மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், கிண்ணியா பிரதேச செயலகம் வரை சென்றது.

கடந்த ஒரு மாத காலமாக சிப்பித் தொழிலுக்கான அனுமதி பிரதேச செயலாளரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் சிப்பித் தொழிலையே தங்களுடைய ஜீவனோபாயத் தொழிலாக நடாத்தி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

நல்லாட்சியில் பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது என்றனர்.



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW