மஹிந்த ராஜபக்ஷவை விசாரிக்க வேண்டும். #ranil

பாராளுமன்ற பொது நிதிக்குழுவிற்கு மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து விசாரித்தால் கடந்த ஆட்சிக் காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நாட்டை கடன் நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்கும் நேரத்தின் போது, கடந்த ஆட்சியாளர்கள் அரச கணக்குகளில் பதிவுகளை மேற்கொள்ளாது பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் பிரதமரிடம் ஐ.தே.கட்சி எம்.பி. நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்ட பதிலை வழங்கினார்.
பிரதமர் தனது பதிலில் தொடர்ந்து தெளிவுபடுத்துதலில், கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
இதன்போது பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டகடன் நெருக்கடியில் தள்ளிவிடப்பட்ட நாட்டையே பொறுப்பேற்போம். பெற்ற கடனையும் வட்டியையும் செலுத்த கடன் வாங்கும் நிலை இருந்தது.
ஆனால் கடந்த வரவு—செலவு திட்டத்தை முன்வைக்கும் வரையிலும் கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடன் தொகை எவ்வளவு என்பதை எம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இன்று 9500, பில்லியன் கடன் என அறியப்பட்ட போதிலும், அது 10,000 பில்லியன்களாக உயரலாம்.
எனவே, கடந்த ஆட்சியாளர்கள் வாங்கிய கடன் தொகையின் உண்மை நிலை என்ன என்பது தொடர் பில் விசாரிப்பதற்கு மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் விசாரணைகள் நடைபெறுகிறது. அதன் அறிக்கை கிடைத்ததும் அதனை வெளியிடுவோம்.
அரச கணக்குகளின் பதிவுகளை ஏற்படுத்தாது மக்களையும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கியையும் ஏமாற்றவே பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே சுமந்திரன் எம்.பி. தலைமையிலான பாராளுமன்ற பொது நிதிக்குழுவிற்கு மஹிந்த ராஜபக் ஷவை அழைத்து விசாரிக்க முடியும்.
அவ்வாறு அழைத்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும். நாடு இன்று கடன் சுமையில் பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது. அத்தோடு பூகோள ரீதியாகவும் பொருளாதார நெருக்கடி தலை தூக்கியுள்ளது. எனவே இவற்றிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். அனைத்தையும் வெற்றி கொள்ள வேண்டும்.
இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றிகொள்வோம் என்று பிரதமர் தெரி வித்தார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW