UNP – SLFP விரைவில் உடன்படிக்கை முள்ளிநியூஸ்

UNP – SLFP விரைவில் உடன்படிக்கை



தேசிய அர­சாங்­கத்தின் ஆட்சி எவ்­வாறு எதிர்­கா­லத்தில் அமை­ய­வுள்­ளது. ஆட்­சியில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக்
கட்­சியும் இணைந்­துள்ள வகி­பாகம் என்ன என்­பது தொடர்­பான விப­ரங்கள் உள்­ள­டங்­கிய உடன்­ப­டிக்­கை­யொன்று விரைவில் கைச்­சாத்­தி­டப்­ப­டப்­ப­ட­வுள்­ளது.


தேசிய அர­சாங்­கத்தில் இணைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இந்த உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­ட­வுள்­ளன. தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் பற்றி பொது மக்கள் தெளி­வற்ற நிலையில் இருப்­ப­தனால் மக்­களைத் தெளி­வூட்டும் வகையில் இந்த ஒப்­பந்தம் அமை­ய­வுள்­ளது.

நேற்று மதியம் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் விவ­சாய அமைச்­ச­ரு­மான துமிந்த திசா­நா­யக்க குறிப்­பிட்ட விப­ரங்­களைத் தெரி­வித்தார்.

அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் அதி­கா­ரத்தைப் பெற­மு­டி­யாமற் போன­தாலும் பொதுத் தேர்­தலில் தான் எதிர்­பார்த்த பத­வியைப் பெற முடி­யாமற் போன­தாலும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி எதிர்­வரும் தேர்­தல்­களில் கட்­சியைப் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார்.

தனக்குக் கிடைக்­காத பிர­தமர் பதவி எவ­ருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து செயற்­படும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்­சிகள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கே சாத­க­மாக அமையப் போகி­றது. மஹிந்த ராஜபக் ஷவின் உதவி எமக்குக் கிடைத்தால் நல்­லது.

அவ­ரது ஆத­ரவு கிடைத்­தாலும் கிடைக்­கா­விட்­டாலும் நாம் கட்­சியைப் பலப்­ப­டுத்தும் முயற்­சியில் வெற்றி பெறுவோம்.

ஜனா­தி­பதி தேர்­தலில் மக்கள் அவரைத் தோற்­க­டித்­தார்கள், நிரா­க­ரித்­தார்கள்.

மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வரின் கருத்­து­களை மக்கள் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. மஹிந்த ராஜபக் ஷ தொடர்ந்தும் இவ்­வா­றான கருத்­துக்கள் அதா­வது பாத யாத்­தி­ரையில் கூறிய கருத்­து­களை வெளி­யி­டு­மாறு வேண்டிக் கொள்­கிறேன். அப்­போது தான் அது எமக்கு சாத­க­மாக அமையும்.

பாத யாத்­தி­ரையில் கலந்­து­கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கட்­சிக்குள் அநேக உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய செயற்குழுவே தீர்மானம் மேற்கொள்ளும் என்றார். (vid)                                                                                         இதனை நண்பர்களுடன் பகிரவும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW