நாடு முழுவதும் இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் புதிய தொழிநுட்பத்தினூடாக இருமடங்கு வேகம் கொண்ட Wi-Fi வசதி பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்படி 400 இடங்களில் Wi-Fi வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 நிறுவனங்களிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவிததார்.
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW