நியூஜெர்சியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 108 பேர் காயம் முள்ளிநியூஸ்

நியூஜெர்சியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 108 பேர் காயம்


அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக நியூஜெர்சி ஆளுனர் கிரிஸ் கிரிஸ்டி உறுதிபடுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர் ஹொபோகனை சேர்ந்த 34 வயதான பெண் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூயோர்க்கிற்கு செல்வற்கான முக்கிய நிலையமான ஹோபக்கன் நகரின் ரயில் நிலையத்தில் சில பயணிகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ரயில் நிலையத்திற்கும் ரயிலிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக ரயில் அதி வேகத்தில் பயணித்ததாக பயணிகள் விபரித்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு பிரிவு, மீட்புகுழுவினர் மற்றும் போக்குவரத்துத் துறை உழியர்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW