கிழக்கின் எழுச்சி 2016 - விவசாயக் கண்காட்சி, இன்று வெள்ளிக்கிழமை, சம்பூர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

இக் கண்காட்சியை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இரா.சம்பந்தன் திறந்து வைத்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW