மூதூர் 3ம் கட்டை பகுதியில் சீமெந்து லொறி விபத்து
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை பகுதியிலுள்ள வாய்க்காலினுல் சீமெந்து ஏற்றுவதற்காக சென்ற லொறி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமான முறையில் உயிர் தப்பியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30) அதிகாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் பொலனறுவையிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காகச் சென்ற லொறியே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி