காஷ்மீரில் மீண்டும் மோதல், 50 பேர் காயம்

காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஜூலை மாதம்9-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் இன்னும் ஓயாமல் தொடர்கிறது. வன்முறை சம்பவங்களில் 75-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இன்று புதிய மோதல் ஏற்பட்டு உள்ளது. தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் கரீம்பாத் கிராமத்தில் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் சோதனை நடத்துவதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடு பட்டவர்களுக்கும், பதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் உருவானது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கற்களை வீசினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 50 பேர் காயம் அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் கல் வீசியதில் 12 போலீசார் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவலின்படி, அங்கு இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீநகரில் மூன்று போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு இன்று ஞாயிறு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிற பகுதிகளில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை உத்தரவு அமலில் உள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW