ஈதுல் அழ்ஹாஹஜ்ஜீப் பெருநாள் வாழ்த்துக்கள் முள்ளிநியூஸ்

ஈதுல் அழ்ஹாஹஜ்ஜீப் பெருநாள் வாழ்த்துக்கள்


இன்ஷா அல்லாஹ் நாளை ஈகை திருநாள் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜீப் பெருநாள்.
இந்த நன்நாளை இப்றாஹிம் அலை அவர்களின் குடும்பம் செய்த தியாகத்தை ஞாபகப்படுத்தும் இன் நன்நாளில் நாம் அதிகம் அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து பெருநாளை கொண்டாடுவோம் ,இதில் ஹலாலானவற்றை உண்டு .ஹலாலானவற்றை பருகி சிறப்புடன் கொண்டாடுவது தான் நாம் அல்லாஹ்வுக்கு செய்யும் நன்றிகளில் சேரும் .
மாறாக ஹராமான மது பானங்கள் அருந்துவது.சூது விளையாடுவது இன்னும் பல அல்லாஹ் தடுத்ததை இப்பெருநாளில் நாம் கையாள்வது இப்றாஹீம் நபியின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும்.அத்தோடு குர்பான் கொடுக்கும் பிராணிகள் .மாமிசங்கள்.போன்றவற்றை வீடியோ போட்டோக்கள் எடுத்து பரப்புவது நாமே நம் சமூதாயத்திற்கு செய்யும் பெரிய துரோகம் அகவே அவ்வாறான காரியங்களை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும் .பொறுப்புதாரிகள் ,நலன் விரும்பிகள் இந்த விடயத்தில் கண்காணிக்க வேண்டும் ,நம்மனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்,


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW