மகிந்த வழிபாட்டிற்கு செல்லவிருந்த மலேசிய விகாரையின் தேரர் மீது தாக்குதல்- கலக்கத்தில் மகிந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச வழிபாட்டிற்காக செல்லவிருந்த மலேசிய விகாரை ஒன்றின் தேரர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என தெரியவந்துள்ளது.
மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மஹிந்த நாளைய தினம் செல்வதற்கு திட்டமிட்டமிட்டிருந்த விகாரை ஒன்றின் தேரர் மீது இன்றைய தினம் சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
இச்சுற்றுப்பயணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் மஹிந்தவுடன் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW