யுத்தத்தம் ஆரம்பித்தற்கான காரணிகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை - வெளிவிவகார அமைச்சர்

யுத்தத்தம் எழுந்தமைக்கான காரணிகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தவும், அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மீளவும் யுத்தம் இடம்பெறுவதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மத மற்றும் இன ரீதியான காரணிகளினால் சமூகத்தில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டதாகவும் அச்சமும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்தின் பின்னர் சர்வதேச அரங்கில் இலங்கை முதன்மையானதும் சுயாதீனமானதுமான ஓர் உறுப்பு நாடாக திகழ்கின்றது எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் அங்கம் வகித்து வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்கிளல் மரபு ரீதியான சர்வதேச உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், சர்வதேச அரங்கில் தனிமைப்படும் நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்லோவேனியாவில் நடைபெற்ற சர்வதேச மத்திய கிழக்கு மற்றும் பல்கன் கல்வி நிறுவக மாநாட்டில் பங்கேற்ற போது மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜதந்திர ரீதியில் புதிய பரிமாணத்தில் பயணிப்பதாகவும், அரசியல் சாசன மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்
நாட்டில் நிலவி வந்த சர்வாதிகார பாணியிலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒரே தளத்தில் நாட்டை முன்னேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார் செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW