இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் குழப்பத்தில் கிளிநொச்சி பொலிஸார் முள்ளிநியூஸ்

இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் குழப்பத்தில் கிளிநொச்சி பொலிஸார்


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW