உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டம் முள்ளிநியூஸ்

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டம்


உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையொப்பத்துடன் அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்கப்பட்டமைக்கான கண்டனம்

யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப் பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது – அப் பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட - அம் மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை – மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

இம் மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் - செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட - இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது.

மிக அண்மைக்காலமாக – மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறை கொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் - இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது - எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்? என்பது புரியவில்லை.

எனவே – சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்பட வேண்டும் என்பதுடன் - வன்முறையை கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

ஜோசப் ஸ்ராலின்,
பொதுச்செயலாளர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW