மைத்திரியும், ரணிலும் திருமணம் செய்துள்ளனர் - சஜித் அறிவிப்பு முள்ளிநியூஸ்

மைத்திரியும், ரணிலும் திருமணம் செய்துள்ளனர் - சஜித் அறிவிப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள அரசியல் திருமணமானது நிரந்தரமானது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது நாம் கூட்டு எதிர்கட்சியினருக்கு தரும் தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மற்றுமொரு திருமணத்தை நடாத்த கூட்டு எதிர்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று பொரல்ல கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினை இலங்கையின் முதல்தர கட்சியாக பெயர் பெற தான் என்றும் ஆதரவு நல்குவதாகவும் அமைச்சர் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியானது அனைத்து பிரச்சினைகளையும் எதிர்காலத்தில் தீர்த்து வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW