பொகவந்தலாவையில் பாரிய ஆர்பாட்டம்

முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிரக, இன்று காலை பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான வீதியினை மறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில், தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் சில மணித்தியாலங்கள் ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ கிழ்பிரிவு, மேற்பிரிவு, டின்சன், கொட்டியாகலை, கெம்பியன் ஆகிய தோட்ட மக்கள் ஈடுபட்டுள்ளதோடு, சுமார் 1000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.