திருகோணமலை இலந்தை குளம் முஸ்லிம்கள் மீளக்குடியேற விருப்பம் குறித்து ஆராய்வு முள்ளிநியூஸ்

திருகோணமலை இலந்தை குளம் முஸ்லிம்கள் மீளக்குடியேற விருப்பம் குறித்து ஆராய்வு



 ( ihsana பரீத்)
 திருகோணமலை மாவட்டத்தில் இலந்தைகுளம் முஸ்லிம்கள் மீளக்குடியேற விருப்பம் குறித்து பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் ஆராயாப்பட்டுள்ளது.

 திருகோணமலு மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசத்திலுள்ள காசீம் நகர் எல்லைக்கிராமம் இழைந்தைக்குளம் முஸ்லிம்கள் 1983 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்திருந்தனர்.
 தற்போது இவர்கள் புத்தளம், முள்ளிப்பொத்தானை நிலாவெளி புல்மோட்டை போன்ற இடங்களில் 122 குடும்ப அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் .

மீண்டும் தம் சொந்த இடம் திரும்புவதக்கும் மீழக் குடியேறுவதற்கும் விருப்பம் தெரிவித்து குச்சவெள்ளிகிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஊடாக பிரதேச செயலாளருக்கு தெரியப்படடுத்தியுள்ளனர் ,

 கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே அவர்களின் தலைமையில் நடந்த பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இம்ரான் எம்பி மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைவாக இவ்விடயம் ஆராயப்பட்டு இலந்தைகுளம் முஸ்லீம்கள் மீளக்குடியேறுவதக்கான முதல் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய சம்மேளனத்தின் செயலாளர் யூசுப் தெரிவித்தார்


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW