நியூசிலாந்து-மும்பை மோதும் பயிற்சி கிரிக்கெட் இன்று தொடக்கம்

நியூசிலாந்து-மும்பை அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
நியூசிலாந்து அணி
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணி ரஞ்சி சாம்பியன் மும்பையுடன் 3 நாள் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
தங்களை தயார்படுத்தும் வகையில் இந்த பயிற்சி ஆட்டத்தை நியூசிலாந்து அணி பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஆனால் ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதால் வேகப்பந்து வீச்சு எடுபடக்கூடும்.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை. ஆனால் அதற்கு நேர்மாறாக பயிற்சி ஆட்டத்திற்கு ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், ‘இது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை, எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார். இது பயிற்சி ஆட்டம் என்பதால் 15 வீரர்களை மாற்றி மாற்றி களம் இறக்கிக் கொள்ளலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோகித் சர்மா
மும்பை அணிக்கு ஆதித்ய தாரே கேப்டனாக இருக்கிறார். ரோகித் சர்மாவும் மும்பை அணியில் இடம் பெற்று இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சோபிக்க தவறினாலும், டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சி ஆட்டத்தில் அவர் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டால் தான், டெஸ்டில் களம் காணும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த பயிற்சி ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW