கிளிநொச்சி சந்தை தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருள் எரிந்து நாசம் முள்ளிநியூஸ்

கிளிநொச்சி சந்தை தீ விபத்தில் பல கோடி ரூபாய் பொருள் எரிந்து நாசம்


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

 கிளிநொச்சியின் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முன்னிரவு எட்டு மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 75 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது

இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகள் உட்பட மேலும் பல கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.

இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிகளும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW