சிரியாவில் பிணைக்கைதிகள் கழுத்தை அறுத்து தொங்கவிடும் கொடூர வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டனர்

சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர். பிணைக்கைதிகளை தலையைதுண்டித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியிட்டு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தற்போது வேறுவிதமாக கொலை செய்யும் ஒரு கொடூரமான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், ஆரஞ்சுநிற உடை அணிவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளது. அவர்களை முழங்காலிட்ட நிலையில் உட்காரவைத்து பின்புறம் நிற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆடு, மாடு மற்றும் மிருகங்களை அறுப்பது போன்றுபிணைக் கைதிகளின் கழுத்தை ஈவு இரக்கமின்றி அறுக்கின்றனர். ரத்தம் பீறிட்ட நிலையில் அவர்கள் மடிந்து சாய்கின்றனர்.
அத்துடன் நிற்காமல் அவர்களின் உடலை இறைச்சிக்கடையில் ஆடு,மாடுகளை தொங்கவிடுவது போன்று கொலை செய்யப்பட்டவர்களையும் தொங்கவிடுகின்றனர். இக்காட்சிகள் 12 நிமிடங்கள் ஓடுகிறது. இக்கொலைக்கள் வடகிழக்கு சிரியாவில் டெரஸ்-ஷார்நகரில் ஆடு,மாடுகளை வெட்டும் கொலை களத்தில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவுக்கு உளவு பார்த்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது பயங்கரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW