ஒபாமா - ரொட்ரிகோ டுடெர்டோ சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து சர்ச்சைக்குரிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ தகாத சொல் ஒன்றை பயன்படுத்தியதற்கு சில நாட்களுக்கு பிறகு இருவரும் லாவோஸில் சந்தித்துள்ளனர்.
லாவோஸ் தலைநகரான வியன்டியானில் நடந்த தென் கிழக்கு ஆசிய சங்க உச்சி மாநாட்டின் போது இரவு உணவு நேரத்தில், இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் குறைந்த நேரம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்து தகாத சொல் ஒன்றை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பயன்படுத்தியதால், அவருடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்தார்.
பின்னர், தனது விமர்சனம் ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மாறியுள்ளது குறித்து தான் வருந்துவதாக ரொட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW