இது மூதூர் மக்களின் குறல்:-மூதூர் பிரதேசத்தின் ஆலிம்சேனை பிரதான வீதியே நீண்ட காலமாக திருத்தப் படாது ஏன்????

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தின் ஆலிம்சேனை பிரதான வீதியே நீண்ட காலமாக திருத்தப் படாது இவ்வாறு காட்சியளிக்கின்றது. இது மூதூர் மட்டக்களப்பு பிரதான வீதி வாயில் இ௫ந்து சுமார் 1300 மீற்றர் தூரம் வரை குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
இந்த வீதி நீண்ட காலங்கள் புனர்நிர்மானம் செப்பனிடப்படமல் புறக்கணிப்பு செய்வதாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்குன்றனர் ஆலிம்சேனை பகுதியில் முஸ்லிம் தமிழ் மக்கள் செரிந்து வசிக்கும் பகுதி இங்கு ஆலிம்சேனை முஸ்லிம் பாடசாலை ஒன்றும் உள்ளது மணவர்கள் பொதுமக்கள் இவ்வீதியைய் கடந்து செல்ல சிறமப்படுகிறார்கள் .
மற்றும் வைத்திசாலைக்கு அவசர தேவைநிமித்தம் முச்சக்கர வண்டியில் கற்பிணித்தாய்மார்கள் மற்றும் நேயாளிகளை கொண்டு செல்வதற்கு இந்த வீதியைய் பயன்படுத்த முடியாமல் நீண்ட தூரம் சென்று நடபாதையில் பிரதான வீதிக்கு நடபாதையில் செல்லவேண்டிய தேவையும் ஏற்படுகிறது . இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து இந்த வீதியை புனர்நிர்மானம் செய்து தருமாறும் பொதுமக்கள் பாவனைக்கு உகர்ந்ததாக அமைத்துத்த௫மாறும் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தெரிவிக்குன்றனர்
அனுப்புனர்:-
Lihar Mohammed