கொள்ளைகளைத் தடுப்பதற்காகவே பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது

கடந்த அராசங்கத்தில் இடம்பெற்ற கொள்ளைகளைத் தடுடுப்பதற்காகவே என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கல்வி அமைச்சில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும், அவற்றைத் தடுப்பதற்காகவே இந்த முறையை அறிமுகப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைத்தியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்வதற்காக அவர்கள் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் கவலையடைவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் ஜனாதிபதியின் பாரியார் மூலம், மாணவர்கள் பலரின் பெயர்கள் பட்டியலிட்டு கொழும்பில் பிரபல பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த ஆட்சியைப் போன்று முறைகேடுகள் இடம்பெறுவதில்லை என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.