அன்சார் தாக்கப்பட்ட விவகாரம்: ஐவர் கைது முள்ளிநியூஸ்

அன்சார் தாக்கப்பட்ட விவகாரம்: ஐவர் கைது


கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில், மலேஷிய ஊடகங்களில் வௌியான செய்தியை அடுத்து, அத தெரண வினவிய போது, இலங்கை வௌிவிவகார செயலாளர் எசல வீரக்கோன் இதனை உறுதிசெய்துள்ளார்.

மாநாடு ஒன்றுக்காக மலேஷியா சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்த நாட்டிலுள்ள தமிழர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்றையதினம் மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையிலுள்ள மலேஷியாவுக்கான உயர்ஸ்தானிகரிடம் இது குறித்து தகவல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW