என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்: ராதிகா ஆப்தே

பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன். அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது.
இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா? என்று கேட்டனர். அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்.
நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.