இனவாதம், மதவாதம் பேசுகின்ற எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை! முள்ளிநியூஸ்

இனவாதம், மதவாதம் பேசுகின்ற எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை!



எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பாக போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் விரிவான கூட்டணியின் கீழ் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி தற்போது இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதோடு, இதற்கு சில கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதுஎவ்வாறு இருப்பினும் இனவாதம் அல்லது மதவாதம் பேசுகின்ற எந்தவொரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.(AD)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW