வளர்ப்பு மகளை கொலை செய்த தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்
வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவர் மதம் மாறியமை தொடர்பில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று குறித்த 55 வயதுடைய தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏஏற்பட்டதைத் தொடர்ந்து கட்டில் பலகையால் மகள் மீது தாய் தாக்கியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தாய் (வயது 55) கைது செய்யப்பட்டு நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, 14 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றுக்கு கொண்டு வரப்பட்டு, விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW