துப்பாக்கி சூட்டில் பெண் பலி - இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயம் முள்ளிநியூஸ்

துப்பாக்கி சூட்டில் பெண் பலி - இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயம்


மதுகம - வெலிபென்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இவர்கள் தமது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வேளை, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 37 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் அவரது மூன்று வயதான மகள் மற்றும் ஒரு வயதான மகனும் காயமடைந்துள்ளனர்.

மேலும், இதன்போது ஆணொருவரும் காயமடைந்துள்ளார். இவர்கள் மூவரும் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்துக்குக் காரணமான சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிபென்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW