ஐ.எஸ் அமைப்பை விரட்ட துருக்கியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம் முள்ளிநியூஸ்

ஐ.எஸ் அமைப்பை விரட்ட துருக்கியுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்


இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகள் வலுவாக உள்ள சிரியாவில் உள்ள ராக்கா நகரத்திலிருந்து அவர்களை வெளியேற்ற துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா விரும்புவதாக துருக்கி தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கை ஆலோசனையை அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்ததாக தெரிவித்த துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான், இதற்கு ஒத்துழைப்பு தர துருக்கி தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

''நம் இரு நாட்டு படையினரும் இணைந்து பணியாற்றலாம்'' என்று அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் தேவைப்படுகிறது என்றும் எர்துவான் கூறியுள்ளார்.

ஏற்கனவே, வடக்கு சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு மற்றும் குர்திய படைகள் ஆகிய இரண்டு தரப்பினரையும் எதிர்த்து பெரிய ராணுவ நடவடிக்கையில் துருக்கி ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW