இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயன்றார் !! ஒரு கோடி ஆசாமிக்கு கம்பி – பெருநாளும் இல்லை

பண்டாரகம, அடலுகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான இந்த நபர் காணாமல் போனமை தொடர்பில் அவருடன் திருகோணமலைக்கு சென்ற அவரது நண்பர் ஒருவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனடிப்படையில் இவரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 7 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காணாமல் போயிருந்து இந்த நபர் நேற்று முன்தினம் தன்னுடன் திருகோணமலை வந்திருந்த நண்பரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
இவ்வாறு அழைப்பினை மேற்கொண்டிருந்த தொலைபேசி இலக்கத்தை .வைத்து சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தி யிருந்ததோடு, அவ்வழைப்பினை ஏற்படுத்தியிருந்த இடத்தை தேடி விசாரணைக் குழுவினர் சென்றிருந்தனர்.
அதன்போது யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த தொலைத்தொடர்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி. காணொளிகளை பரிசீலனை செய்த போது, தேடப்பட்டு வந்த உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் யாழிலிருந்து வவுனியா சென்று அங்கிருந்து நேற்று முன்தினம் கொழும்புக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை ஹல்துமுல்ல பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்திருந்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து சந்தேக நபர் திருகோணமலைக்கு 50 ஆயிரம் ரூபாவை மாத்திரம் கொண்டு சென்றுள்ளார் என்றும் பலதரப்பட்ட வர்த்தகரிடமிருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவுக்கு மேல் தனிப்பட்ட கடன்களை பெற்றிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த வர்த்தகர் காணாமல் போன சந்தர்ப்பத்தில் அவரிடம் ஒரு கோடி ரூபா காணப்பட்டதாக அவரது தந்தை பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காணாமல் போனதாக பொய்யாக நடித்த இந்த நபர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நேற்று திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றமற்றவர்கள் என தெரிவித்து நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் இவரை நீதிமன்றில் ஆஜர் செய்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.