வாட்சப் குரூப்புகளில் இணைகின்ற ஜின்களுக்கும் சைத்தான்களுக்கும்!

அது ஓர் ஊரின் பெயரைக்கொண்ட வாட்சப் குரூப் .
அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட நாட்டின் சட்டங்களில் எவ்வளவு ஓட்டை ஒடிசல்கள் இருக்குமோ அதேபோல ஒவ்வொரு வாட்சப் குரூப்புக்களின் அட்மின்கள் வகுக்கும் சட்டங்களிலிலும் விதி முறைகளிலும் அதே பொத்தல்கள் இல்லாமல் இல்லை .
என்னதான் விதிமுறைகள் என்றாலும் எதையுமே பூரணமாக வரையறுக்க முடியாதுதானே. .?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பத்தில் இஸ்லாமிய விடயங்களை ஷேர் பண்ணிய போது சில பேர்களுக்கு பிடிக்கவில்லை .
சில பேர்களுக்கு ஹதீஸ்களில் அல்லது குர் ஆண் வசனங்களில் அத்தனை வெறுப்புக்களா. .? ஆட்களை குரூப்புகளில் சேர்க்கும் போது ஜின்களும் சைத்தான்களும் சேர்க்கப்பட்டு விடுகின்றனவோ . என்னவோ ..?
‘இஃது இசுலாமிய வாட்சப் இல்ல ‘ என்று சில பெருந்தலைகள் பொறுமின .
‘ஆமாம் ..’ என்று ஆட்டுக்குட்டிகள் போன்று சில தலையாட்டின .
இன்னும் சிலர் எனக்காக வக்காலத்து வாங்கினர் .
ஏன் இந்த வம்பு என்று எண்ணிக் கொண்டு, இஸ்லாத்தை அடிப்படையாக கொள்ளாமல் ,அதை ஒருவருக்கு ஒருவர் அறிவுறுத்தாத எந்த குரூப்பும் உருப்படப்போவதில்லை என்று வெறுப்பை கொட்டி விட்டு அந்த குரூப்பில் இருந்து விலகி விட்டேன் .
பல மாதங்கள் சென்ற நிலையில் பல அட்மின்களில் ஒர் அட்மிண் என்னை தொடர்பு கொண்டார் . மையத்து வீட்டு செய்திகளும் குர்பான் கொடுத்த போட்டோக்கள் மட்டுமே இப்போதெல்லாம் குரூப்பில்
வருவதாக குறைப்பட்டார் . இறங்கிய என்னை மீண்டும் ஏற்றி விட்டார் .
ஆடிய காலும் எழுதிய கையும் சும்மா இருக்குமா என்ன ..?
வாசித்து முடிந்த நல்ல ,பயனுள்ள
செய்திகளை அங்கே ஷார் பண்ணிணேன் . இடைக்கிடையே இஸ்லாம் ,எனது எழுத்துக்கள், ஆக்கங்கள் என்று சில மாதங்கள் சென்றிருக்க வேண்டும் .
முருங்கை மரங்களில் ஏறி பழகி போன வேதாளங்களுக்கு புளிய மரத்தில் ஏற சொன்னால் பிடிக்குமா ? மீண்டும் ஏறின வேதாளங்கள் ..
என்னை ஏற்றிய அட்மிண் மீண்டும் தொடர்பு கொண்டார் . அடக்கி வாசிக்கச்சொல்லி மிகவும் அழகாக ,ஒழுக்கமாக சொன்னார் .
மக்கள் கொடுக்கும் பிரசர்கள் மன்னர்களுக்குத்தானே தெரியும். பாவம் அவர் என்ன செய்வார்.. ??
செய்திகள் அதிகம் ஷார் பண்ணப்படுவதாக இம்முறை கொம்பிளைன்ட் .
ஆ… வேண்டாத பொண்டாட்டி வெங்காயம் வெட்டினாலும் பிராப்லம் வெந்தய கொழம்பு காய்ச்சினாலும்
பிராப்லம்..
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிரியாவில் ஈராக்கில் காஷ்மீரில் பலஸ்தீனில் என்ன நடக்கிறது என்று அறிய விருப்பம் இல்லாமல் வீட்டுக்குள்ளே அடுப்பு பற்றினால் போதும் பிரியாணியும் கிரீன் டீயும் கிடைத்தால் போதும் என்று வாழும் சமூகம் எப்போதுதான் திருந்த போகிறதோ ..
கடைசியில் கடுப்பில் அந்த குரூப்பில் இருந்தே கழண்டு விட்டேன் ..
வாட்சப் குரூப்புகளில் மனிதர்கள்
மட்டுமல்ல கெட்ட ஜின்களும் ஷைத்தான்களும் இணைக்கப்பட்டு விடுகின்றனரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் .
-முஹம்மது ராஜி-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW