திருகோணமலையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

திருகோணமலையில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு


திருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள கடலில் குளிக்கச் சென்ற போதே இந்த நபர் நேற்று (29) மாலை நீரில் மூழ்கியுள்ளார்.

கடலில் மூழ்கியவரை மீட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே கடலில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW