நடமாடும் பொலீஸ் நிலையம் இம்மாதம் 30 திகதி ஆரம்பம் முள்ளிநியூஸ்

நடமாடும் பொலீஸ் நிலையம் இம்மாதம் 30 திகதி ஆரம்பம்


மக்களின் சேவைகளுக்கு ஏற்ற வகையில் ஐந்து வருட பொலிஸ் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் பொலிஸ் நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், குறித்த திட்டம் இந்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 30 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW